முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் மெர்டேக்கா – மலேசிய தினக் கொண்டாட்டங்கள்

நாட்டின் சுதந்திர தினம், மலேசிய தினக் கொண்டாட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலேசியர்களுடன் கலந்து கொண்டபோது எழுந்த உணர்வு என்றும் மறக்க இயலாதது என நிதி அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ்  கருத்துரைத்துள்ளார்.

நாம் இம்முறை 65ஆவது சுதந்திர தினம், 59ஆவது மலேசிய தினத்தை மட்டும் கொண்டாடவில்லை. மாறாக பெருந்தொற்றுப் பரவல் காலகட்டத்தில் அதனை எதிர்கொள்ள நாம் முன்னெடுத்த  முயற்சிகளுக்கும் மதிப்பளித்துள்ளோம்.

நாட்டில் கோவிட் -19 தொற்றுப் பரவல் ஏற்பட்ட ஆரம்பக் காலங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். திடீரென ஏற்பட்ட தொற்றுச் சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட மரணச் சம்பவங்களும் தொடர்ந்து உயர்ந்தன.

நான் அப்போதுதான் கார்ப்பரெட் துறையில் இணைந்திருந்தேன். நாட்டில் தொற்றுப் பரவல் ஒருபுறம் இருக்க பொருளாதாரமும் நெருக்கடியை எதிர்நோக்கியது.

பல்லாயிரக்கணக்கானோர் வேலையை  பல வர்த்தகங்கள் மூடப்பட்டன. இருப்பினும் நிதி அமைச்சர் என்ற என் பொறுப்பை நான் உணர்ந்து செயல்படத் தொடங்கினேன்.

மக்களின் பாதுகாப்பை முன்னெடுத்து பொருளாதார அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வந்தேன். இது தனிமனித முயற்சி கிடையாது. மாறாக அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் நாம் மீட்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது.

குறிப்பாக முன்களப் பணியாளர்களின் ஙே்வை அளப்பரியது என்றுதான் கூற வேண்டும். இந்தத் தொற்றுப் பரவல் காலகட்டத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் ஙெ்ய்த தியாகம் கணக்கில் அடங்கா.   முன்களப் பணியாளர்களையும் நான் அங்கீகரிக்க வேண்டும். அவர்களும் இந்தப் பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மலேசிய மக்களுக்கு தகவல்கள், தரவுகளைத் தெரிவிக்க அயராது உழைத்தனர்.

அண்மையில் நான் எழுதிய புத்தகத்தில் இந்த முன்களப் பணியாளர்களைப் பாராட்டி மதிப்பளித்துள்ளேன் என்று தெங்கு ஸஃப்ருல் குறிப்பிட்டார்.

நம் அனைவரின் கூட்டு முயற்சியால் அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளாலும் நாட்டின் பொருளாதாரம் மீட்சி கண்டு வருகிறது. அதேபோல் பெருந்தொற்றுப் பரவலும் கணிங்மாகக் குறைந்துள்ளது என்று அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here