தொடர் மழை காரணமாக நாட்டின் ஏழு ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன

கோலாலம்பூர், செப்டம்பர் 18 :

இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி, தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏழு ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை மருதி, மீரி, சரவாக்; சுங்கை செண்டுக், தாங்காக், ஜோகூர்; சுங்கை பத்தாங் தேராப், கெடா; சுங்கை லிங்கி, போர்ட்டிக்சன், நெகிரி செம்பிலான் மற்றும் சுங்கை லிங்கி, சிரம்பான், நெகிரி செம்பிலான் ஆகிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளன.

மேலும், சுங்கை டூரி கெரியான், செபராங் பிறை செலாத்தான், பினாங்கு மற்றும் சுங்கை மலாக்கா, பத்து ஹம்பாரில் உள்ள சுங்கை மலாக்கா ஆகியவையும் அபாய அளவைத் தாண்டியுள்ளன.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களம் https://publicinfobanjir.water.gov.my என்ற இணையத்தளத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைத்து ஆறுகளிலும் நான்கு ஆறுகளில் நீர்மட்டம் மேல்நோக்கிய போக்கைக் காட்டியதுடன் மற்ற இரண்டு ஆறுகளில் நீர்மட்டம் குறைவடைந்து வருகிறது.

“சம்பந்தப்பட்ட அனைத்து ஆறுகளும் 0.02 மீட்டர் முதல் 0.17 மீட்டர் வரை அபாய அளவை தாண்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மழையின் அளவைப் பொறுத்தவரை, ஒரு மில்லிமீட்டர் முதல் 12 மில்லிமீட்டர் வரை லேசான மற்றும் மிதமான மழை மட்டுமே பதிவாகியுள்ளது என்றும், அனால் நாடு முழுவதும் கனமழை பெய்யவில்லை என்றும், இதுவரை,ஜோகூர், மலாக்கா மற்றும் பத்து பஹாட் ஆகிய மூன்று மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புக் குழு இன்று வரை மொத்தம் 194 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இது இன்று குறைந்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here