ஜோகூர், பேராக் மற்றும் மலாக்காவில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

கோலாலம்பூர், செப்டம்பர் 19 :

ஜோகூர், பேராக் மற்றும் மலாக்காவில் வெள்ள நிலைமை இன்று சாதகமான வளர்ச்சியைக் காட்டுகிறது, ஏனெனில் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைந்து வருகிறது.

ஜோகூரில், புதன்கிழமை அதிகாலையில் பெய்த கனமழை மற்றும் உயர் அலை நிகழ்வு காரணமாக பத்து பஹாட் மாவட்டத்தைத் தாக்கிய வெள்ளம், நேற்று இரவு பதிவான 164 பேருடன் ஒப்பிடும்போது இன்று காலை 8 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131 ஆகக் குறைந்துள்ளது.

மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (JPBD)இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 33 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த புதன்கிழமை முதல் திறக்கப்பட்ட செகோலா மெனெங்கா கெபாங்சான் ஸ்ரீ காடிங்கில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் படி, மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தாமான் ஸ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரு ஸ்ரீ காடிங், பெகான் ஸ்ரீ காடிங் மற்றும் கம்போங் ஸ்ரீ தஞ்சோங் ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில் பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில் , பாகன் செராய் அருகே உள்ள கம்போங் தெங்கா புக்கிட் செமாங்கோலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 9 மணி நிலவரப்படி, செமாங்கோல் ஹால் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் இன்னமும் அங்கு தங்கியுள்ளனர்.

வெள்ளம் முற்றாக குறைந்து தற்போது நல்ல வானிலை நிலவுவதால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்று தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை பல மணி நேரம் பெய்த கனமழையால், பாகான் செராயில் உள்ள கம்போங் தெங்கா புக்கிட் செமாங்கோல் பகுதி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது.

இதற்கிடையில், மலாக்கா, அலோர் காஜாவில் ஏற்பட்ட வெள்ள த்தினை தொடர்ந்து, அங்கு திறக்கப்பட்ட இரண்டு PPS இல் வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 8 மணிக்கு ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 29 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை 8.30 மணி நிலவரப்படி எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 28 பேராகக் குறைந்துள்ளது.

மலாக்கா குடிமைத் தற்காப்புப் படை (APM) வெளியிட்ட ஒரு அறிக்கையில், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் புக்கிட் பாலாயில் உள்ள பலாய் ராயா பிபிஎஸ்ஸில் இடம்பெயர்ந்ததாகவும், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் புக்கிட் தம்புனில் உள்ள பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியது.

“பாதிக்கப்பட்டவர்கள் கம்போங் புக்கிட் தம்புன், கம்போங் புக்கிட் பலாய் மற்றும் கம்போங் பூலாவ் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்” என்று அறிக்கை கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here