15வது பொதுத் தேர்தல் தொடர்பில் புதன் கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்கிறார் பிரதமர்

புத்ராஜெயா, செப்டம்பர் 19 :

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தல் (GE15) தொடர்பான விஷயங்கள் எதிர்வரும் புதன்கிழமை (செப்.21) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நியூயார்க் செல்ல உள்ளதால், அதற்கு முன் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் அம்னோ டாப் ஃபைவ் கூட்டத்திற்கு முன்னதாக GE15 குறித்த விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

“எங்களிடம் பெர்சாத்து, கபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS) மற்றும் அம்னோ ஆகிய கட்சிக்களின் பிரதிநிதிகள் அமைச்சரவையில் உள்ளனர், எனவே 15வது பொதுத்தேர்தல் குறித்த விஷயங்களை அமைச்சரவையில் விவாதிப்போம்.”

தேசிய எரிசக்தி கொள்கை 2022-2040 ஐ இன்று அறிமுகப்படுத்திய பின்னர் GE15 இல் சாத்தியமான விவாதம் பற்றி கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, முஹிடின் யாசின் இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில், இஸ்மாயில் சப்ரி பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்கத் தவறினால், அவர் உடனடியாக தேர்தலுக்கு அழைக்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here