4 வாகனங்கள் மோதல் – லோரி ஓட்டுநர் பலி; 7 பேலீஸ்காரர்கள் பலத்த காயம்

ரெம்பாவ் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (வடக்கு) கிலோமீட்டர் 225 இல், நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் லோரி ஓட்டுநர் ஒருவர் இறந்தார். ஏழு போலீஸ்காரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் பிற்பகல் 3.40 மணியளவில் நடந்ததாக ரெம்பாவ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் ஹஸ்ரி முகமது தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை அதிகாரிகளால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். முதற்கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் ஜோகூர் பாரு உத்தாரா போலீஸ் படை வேன், ஒரு லோரி மற்றும் இரண்டு வாகனங்கள் சிக்கின.

ஏழு போலீஸ்காரர்கள் பலத்த காயம் அடைந்தனர், அதே நேரத்தில் டிரக் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்  என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here