நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான தேதி இன்னமும் முடிவாகவில்லை என்கிறார் பிரதமர்

நியூயார்க், செப்டம்பர் 26 :

15வது பொதுத் தேர்தல் (GE15) எப்போது நடத்தப்படும் என்ற ஊகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தை எப்போது கலைப்பது என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

செப்டம்பர் 30 அன்று அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்பில் நடைபெறும் விவாதத்தின் முடிவைப் பொறுத்தே, நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பான எந்த முடிவும் அமையும் என்றார் பிரதமர்.

செப்டம்பர் 30-ம் தேதி மாலை நடைபெறும் 5 உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அரசியல் விவகாரப் பிரிவின் கூட்டங்கள் நண்பகலிலும் அன்று இரவு அம்னோ உச்ச மன்ற கூட்டமும் நடைபெறும் என்றும் அதுவரை காத்திருப்போம், ”என்றும் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கூறினார்.

மேலும் அம்னோ துணைத் தலைவரான இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து கூறுகையில், அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இதுவரை தனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here