பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 4 :
ஆபாசமான செயல்கள் அடங்கிய வீடியோ கிளிப்களை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றியதாக, நடிகர் சுல் ஆரிஃபினுக்கு எதிராக செப்பாங் அமர்வு நீதிமன்றம் இன்று RM30,000 அபராதம் விதித்தது.
36 வயதான நடிகருக்கு எதிரான குற்றச்சாட்ட, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நூர்ஹிஷாம் முகமட் ஜாபர் முன்நிலையில் வாசிக்கப்பட்ட பிறகு, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ், முரண்பாடான வீடியோ கிளிப்களை உருவாக்கி, தகவல் பரிமாற்றத்தை செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட நடிகருக்கு RM30,000 அபராதம் விதித்து நீதிபதி நூர்ஹிஷாம் ஜாபர் இன்று காலையில் தீர்ப்பளித்தார்.
வரவிருக்கும் Perempuan Itu என்ற தொலைக்காட்சி தொடரின் டீசரை பதிவேற்றியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது அவருக்கும் ஒரு சக நடிகைக்கும் இடையிலான நெருக்கமான காட்சியை சித்தரித்ததாக கூறப்பட்டது.


















