நாடாளுமன்றத்தை கலைக்க இது சரியான நேரம் இல்லை என்கிறது பாஸ்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 4 :

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன், பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி மற்றும் வரவிருக்கும் பருவமழை ஆகியவை தொடர்பில் முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளதாக டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

உம்மா (ummah) எனப்படும் ஒற்றுமையின் முன்னேற்றத்திற்காக அனைத்துக் கட்சிகளுடனும் (அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள்) கலந்துரையாடல்களை தமது கட்சி தொடரும் என்று பாஸ் தலைவர் கூறினார்.

இன்று செவ்வாய்க்கிழமை (அக் 4) முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஹாடி கூறுகையில், “எங்களுக்குள் ஒற்றுமை தேவை, எங்களுக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும், இது பக்காத்தான் ஹராப்பானை தோற்கடிக்க சிறப்பாக துணை நிற்கும்” என்றார்.

“எந்தச் சூழ்நிலையிலும், நாடு மற்றும் மக்களின் நலன் முதன்மையாக இருக்க வேண்டும் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று பாஸ் கருதுவதாக ” அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here