வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு வர்த்தகர்களை குறிவைத்து, மிரட்டி பணம் பறிக்கும் நபர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 7 :

நேற்று வியாழன் (அக். 6) பாவித்த கார் டீலர் கொடுத்த புகாரின் பேரில், மிரட்டி பணம் பறிப்பதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

41 வயதுடைய சந்தேக நபர் செர்டாங்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அன்பழகன் தெரிவித்தார்.

போலீஸ் அறிக்கையின் அடிப்படையில், சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் தோட்டா, கொலை மிரட்டல் போன்ற படங்களை WhatsApp செயலி ஊடாக புகார்தாரருக்கு அனுப்பியதாக அவர் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் தனியாக செயல்படுவதாக நம்பப்படுவதுடன், அவர் காஜாங்கில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து பாதுகாப்புப் பணத்தை மிரட்டிப் பறித்து வந்ததாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் மூலம் வர்த்தகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகிறது, மேலும் அவரிடமிருந்து ஒரு தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

போதைப்பொருள்வழக்கு உட்பட 10 முந்தைய குற்றப் பதிவுகளை கொண்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருக்கு சாதகமாக பதிலைப் பெற்றார்.

மேலும் சந்தேக நபர் நாளை சனிக்கிழமை (அக்டோபர் 8) வரை விளக்கமறியலில் இருப்பார், பின்னர் துப்பாக்கி வைத்திருந்த வழக்குக்காக காஜாங் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here