இளைய தலைமுறையினர் பலர் சமயம் குறித்து அறிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் ஆர்வமாக இருக்கின்றனர். நமது வாழ்க்கையில் சமயம் இன்றியமையாத ஒன்று என்பதனை நம்மால் மறுக்க முடியாது. சமயம் குறித்து கற்று கொள்ள சொற்பொழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் வரும் 25.7.2025 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில் 4ஆவது முறையாக தெலுக் இந்தான் வெள்ளை விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சமய சொற்பொழிவு நடைபெறும் என்று ஆலயத்தலைவர் கிருஷ்ணன் மூர்த்தி தெரிவித்தார்.
இந்த சொற்பொழிவினை சங்கரத்னா பி.சுப்ரமணியம் வழங்கவிருக்கிறார். இந்த முறை வேண்டுதல் / நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துவது எப்படி? என்று குறித்து அவர் சொற்பொழிவாற்ற இருக்கிறார். நமது சமயம்; நமது பொறுப்பு என்பதனை அனைவரும் உணர்ந்து சுற்று வட்டார மக்கள் இந்த சொற்பொழிவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேல் விவரங்கள் பெற விரும்புவோர் 012-5196309 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். சொற்பொழிவிற்கு பிறகு வருகையாளர் அனைவருக்கு இலவச இரவு சிற்றுண்டி வழங்கப்படும். இந்த சொற்பொழிவு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.









