தாப்பா, அக்டோபர் 17 :
நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு (GE15) வழி வகுக்கும் வகையில் பேராக் மாநில சட்டப் பேரவை இன்று கலைக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.
பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவின் ஒப்புதலைப் பெற்று, மாநில சட்டசபை கலைக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமையன்று, டத்தோஸ்ரீ சாரணி மாநில சட்டசபையை கலைக்க ஒப்புதல் பெறும் நோக்கில் சுல்தான் நஸ்ரின் ஷாவினை சந்தித்தார் என்றும், வெள்ளிக்கிழமை ஆட்சியாளரை மீண்டும் சந்திக்கச் சொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
டத்தோஸ்ரீ சாரணியின் கூற்றுப்படி, சட்டமன்றக் கலைப்புக்கான விண்ணப்பம் பேராக் மாநிலத்தின் அரசியலமைப்பின் பிரிவு 2 பிரிவு 36 இன் படி விண்ணப்பிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டது.