லங்காவியில் இன்னமும் 61 குடியிருப்பாளர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

லங்காவி, அக்டோபர் 19 :

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, மொத்தம் 61 குடியிருப்பாளர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று 49 பேராக இருந்தது என்று லங்காவி மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, அஹ்மட் ஷாஃபிக்ரி தராஸ் தெரிவித்தார்.

தற்போது 34 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் அடங்கிய 17 குடும்பங்கள் நிவாரண மையத்தில் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இன்றைய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், இன்று பிற்பகலில் மழை பெய்யும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், விழுந்த மரங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான அவசர அழைப்புகளைப் பெற 04-9611474 என்ற எண்ணில் உள்ள மாவட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை (PKOD) தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here