வாஷிங்டன்:
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு நபர் தனது மனைவியை உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் சகஜம், ஆனால் கணவன் மனைவியைக் கொல்ல முயற்சிப்பது மிகவும் அரிது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு நபர் தனது மனைவியைக் கொல்ல முயற்சித்து, மனைவியின் கை, கால்களை கட்டி உயிருடன் மண்ணில் புதைத்துள்ளார். வாஷிங்டனை சேர்ந்த 42 வயதான யங் சூக் ஆனுக்கும், அவரது 53 வயது கணவர் சாய் கியோங் ஆனுக்கும் நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இருவரும் தனித்தனியாக வசித்து வருவதால், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில், அக்டோபர் 16 ஆம் தேதி, யங் சூக்கின் கணவர் சாய் கியோங் அவரது வீட்டிற்கு வந்து அவரைக் கடத்தி கொலை செய்ய முயன்றார்.சாய் கியோங் தனது மனைவியை முதலில் தாக்கி, பின்னர் அவரது கைகளையும் கால்களையும் கட்டி அவரை காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு காட்டிற்கு கொண்டு சென்றார்.
அவரை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு குழி தோண்டி, அவரை குழிக்குள் தள்ளி மேலே இருந்து மண்ணை அள்ளி போட்டு மூடிவிட்டார். இருப்பினும், இந்த நேரத்தில், யாங் ஒரு சிறிய தந்திரத்தைக் காட்டினார்.
மயக்க நிலையில் கிடந்த அவர் சிறிது நேரத்தில் விழித்துக்கொண்ட பின், எப்படியாவது தான் சுவாசிக்க கல்லறையிலிருக்கும் மண்ணை நீக்கினார். இதனுடன், அவர் தனது கையிலிருந்த ஆப்பிள் கடிகாரத்திலிருந்து உதவி கோரி, தனது மகளுக்கும் போலீசுக்கும் எச்சரிக்கை செய்திகளையும் அனுப்பினார்.
தனது கணவர் தன்னை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றபோது, அவர் தனது ஆப்பிள் கைக்கடிகாரத்திலிருந்து காவல்துறையின் அவசர எண்ணை(911 ஐ) டயல் செய்தார். ஆனால் அந்த ஆப்பிள் வாட்சையும் அவரது கணவர் அடித்து சேதப்படுத்தினார். சுமார் 3-4 மணி நேரம் கல்லறையில் தான் இருந்ததாக யாங் கூறினார். அதன்பின்னர் எப்படியோ மண்ணைத் தோண்டி புதைகுழியில் இருந்து வெளியே வந்து காட்டில் அலைந்து அங்கிருந்த ஒரு வீட்டிற்குச் சென்றார். பின், அங்கிருந்து அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
அதன்பிறகு போலீஸ் குழுவால் அவர் காப்பாற்றப்பட்டாளர். அதே நேரத்தில், அடுத்த நாள், அதாவது அக்டோபர் 17 அன்று, அவரது கணவரும் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி மற்றும் குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.