மலாக்கா இயல்பு நிலைக்கு திரும்பியது; வெள்ள நிவாரண மையங்கள் மூடப்பட்டன

மலாக்கா, அக்டோபர் 26 :

மலாக்காவில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திருப்பியதைத் தொடர்ந்து, அங்குள்ள செக்கோலா கெபாங்சான் (SK) டுரியான் துங்கல் மற்றும் பலைராயா காடெக் டி அலோர் காஜா ஆகிய இடங்களில் இயங்கிவந்த இரண்டு வெள்ள நிவாரண மையங்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மூடப்பட்டன.

இன்று காலை 8 மணியளவில் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 36 பேரும் வீடு திரும்பிய பின்னர் இரண்டு வெள்ள நிவாரண மையங்களும் மூடப்பட்டதாக மலாக்கா பேரிடர் மேலாண்மை குழு செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here