இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி இரு பெண்கள் பலி; மூவர் காயம்

பெந்தோங், அக்டோபர் 28 :

இங்கு பெந்தோங்கை நோக்கிச் செல்லும் காராக்-கெந்திங் செம்பா நெடுஞ்சாலையின் 41வது கிலோமீட்டரில், இன்று அதிகாலை இரண்டு கார்கள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் இறந்தனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி பகாங் சுல்பட்லி ஜகாரியா கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக தமது தரப்புக்கு அதிகாலை 1.14 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

“பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு இயந்திரங்களுடன் மொத்தம் எட்டு உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். “இடத்திற்கு வந்ததும், ஹோண்டா சிட்டி மற்றும் புரோட்டான் பிரீவ் ஆகிய இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து நடந்திருப்பதைக் கண்டறிந்தோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஹோண்டா சிட்டி காரில் இரண்டு பெண்கள் பயணித்ததாகவும், அவர்கள் வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார். அவ்விருவரையும் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது, பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பெந்தோங் மாவட்ட மருத்துவக் குழு அறிவித்தது.

“இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர், ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன், மேலதிக நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here