பிகேஆர் சார்பில் 6 இந்திய வேட்பாளர்கள்: மூவர் புதுமுகங்கள்

வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் நாட்டின் 15ஆவதுபொதுத்தேர்தலில் களமிறங்கும் 72 வேட்பாளர்களை பிகேஆர் அறிமுகம் செய்தது. இவர்களுள் 6 பேர் இந்தியர்கள்.

அக்டோபர் 28 வெள்ளிக்கிழமை இரவு அம்பாங், தாமான் காசிங், எம்பிஏஜே திடலில் பிகேஆர் தேசியத் தலைவர்டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசியத் துணைத் தலைவர்ரஃபிஸி ரம்லி முன்னிலையில் வேட்பாளர் அறிமுகம், உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சிநடைபெற்றது.

ஜோகூர், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் யுனேஸ்வரன் ராமராஜ், சிலாங்கூர் உலுசிலாங்கூர் நாடாளுமன்றத்தொகுதியில் டாக்டர்  சத்திய பிரகாஷ் நடராஜா, சிலாங்கூர் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் ரமணன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் புதுமுக வேட்பாளர்களாகக்களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேவேளையில் கெடா, பாடாங் செராயில் கருப்பையா முத்துசாமி, கூட்டரசுப் பிரதேசம், பத்து தொகுதியில் பிரபாகரன் பரமேஸ்வரன் ஆகிய இருவரும் மீண்டும்போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றனர்.

அதேவேளையில் மணிவண்ணன் கோவின் சிலாங்கூர், கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில்போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here