15வது பொதுத் தேர்தலில் 35 புதிய முகங்களை களமிறக்குகிறது ம.சீ.ச – டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்

கோலாலம்பூர், நவம்பர் 3 :

வரும் 15வது பொதுத் தேர்தலில் 44 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 26 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான ம.சீ.சவின் 70 வேட்பாளர்களில் சுமார் 50 விழுக்காட்டினர் புதிய முகங்களாக இருப்பார்கள் என்று கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் ம.சீ.ச 35 புதிய முகங்களை களமிறக்கவுள்ளது என்றும் இதில் 17 பேர் நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 பேர் சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.

அரசியலில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக, ம.சீ.ச வின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்ப்பாளர்கள் வரிசையில் ஏழு பெண் வேட்பாளர்கள் இருப்பதாக என்று அவர் நேற்று விஸ்மா ம.சீ.ச-இல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“26 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுபவர்களில், ஐந்து பெண் வேட்பாளர்களும் உள்ளனர்,” என்று டாக்டர் வீ மேலும் கூறினார்.

ம.சீ.ச கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ இயூ தியோங் லுக் பத்துவில் போட்டியிடுவார் என்றும், அதே நேரத்தில் டத்தோ செவ் யின் கீன் பண்டார் துன் ரசாக்கிற்குப் போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார். அத்தோடு பண்டார் துன் ரசாக்கின் ம.சீ.ச பிரிவுத் தலைவராக இருக்கும் செவ், உள்ளூர் மக்களுக்கு ஒன்றும் புதிதானவர் அல்ல என்றும் டாக்டர் வீ கூறினார்.

தொடர்ந்து சில ம.சீ.சவின் துணைத் தலைவர்கள் இந்த GE15 இல் போட்டியிட மாட்டார்கள், அதாவது டத்தோ தான் தேய்க் செங் மற்றும் டத்தோஸ்ரீ தி லியான் கேர் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள் என்று டாக்டர் வீ கூறினார்.

அவர்கள் தவிர ம.சீ.சவின் பெண்கள் பிரிவு தலைவர் டத்தோ ஹெங் சே கீயும் வரும் 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

ஹெங் இரண்டு முறை செனட்டராக இருந்ததால் GE15 இல் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here