வலுவான தரவு நிர்வாகத்தில் மலேசியாவுக்கு 75 புள்ளிகள் ஆசியான் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு முன்னோடி

தி.மோகன்

ஜி.எஸ்.எம்.ஏ. எனப்படும் மொபைல் தொடர்புத்துறை சங்கத்திற் கான உலகளாவிய சிஸ்டத்தில் மலேசியாவின் வலுவான தரவு நிர்வாகம் பெற்றிருக்கும் புள்ளி 75 ஆக உயர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.எம்.ஏ. டிஜிட்டல் நாடுகள் குறியீட்டில் இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தச் சாதனையானது தரவுகளைப் பாதுகாப்பது, ரகசியம் காப்பது, பொதுமக்களின் நம்பிக் கையை அதிகரிக்கச் செய்வது போன்றவற்றில் மலேசிய அரசாங்கத்தின் உறுதியான கடப்பாட்டை யும் வலுவான செயல்திட்ட கட்டமைப்புகளையும் பிரதிபலிப்பதாக உள்ளது என்று தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நி சிங் நேற்று கூறினார்.   நம்பிக்கைக்குரிய டிஜிட்டல் புவிசார் துறையை உருவாக்குவதில் மலேசியா தற்போது மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாக இந்தப் புள்ளி விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இறக்கத்தில் இருந்த இந்தப் புள்ளி தற்போது 2025 ஜி.எஸ்.எம்.ஏ. டிஜிட்டல் நேஷன்ஸ் ஆசியான் அறிக்கை யில் 75 புள்ளிகள் பெற்றிருப் பது குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மேம்பாடு, டிஜிட்டல் கட்டமைப்பு தொடக்கம் ஆகிய முக்கியத் துறைகள் அடை யாளம் காணப்பட்டிருக் கின்றன என்றும் அவர் சொன்னார்.

இங்கு கோலாலம்பூரில் உள்ள ஒரு பிரபல ஹோட்ட லில் நேற்று நடைபெற்ற 2025 கோலாலம்பூர் டிஜிட்டல் நாடுகள் உச்சநிலை மாநாட்டில் (ஆசியான் பதிப்பு) உரையாற்றிய தியோ நி சிங், மலேசியாவின் தொலைபேசி நிறுவன நடத்துநர்கள் புத்தாக்கத்தில் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்திருக்கின்றனர். இன்றைய இந்த வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் கூறினார். அதேசமயம், திறன்மிக்க மேலும் ஏற்புடைய மனித வளத்தை மேம்படுத்துவதில் மலேசியாவுக்கு உள்ள வலிமையையும் அந்த அறிக்கை அங்கீகரித் திருப் பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நம்முடைய மக்கள் நம்முடைய மிகப்பெரிய சொத்து. இன்றைய அதி வேகமாக மாறிவரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை அவர்கள் புரிந்துகொண் டுள்ளனர். அதன் தொடர்பில் தொடர்ந்து கற்றுக் கொள்வதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வில்லை என்று தியோ நி சிங் தெரிவித்தார்.

எந்தவொரு டிஜிட்டல் நாட்டிலும் மக்களின் நம்பிக் கையே வலுவான தடமாக விளங்குகிறது. ஆசியானைப் பொறுத்தவரை டிஜிட்டல் நம்பிக்கையை வலுப்படுத்து வது என்பது வலிமையான தரவு பாதுகாப்பை உறுதிப்படுத்து வது ஆகும். மேலும் அதிகரித்து வரும் மிரட்டல்களிலிருந்து அதனைப் பாதுகாப்பது அதில் பங்கேற்பது பாதுகாப்பானது என்று குடிமக்களும் வணிகப் பெருமக்களும் நம்பும் அளவில் ஒரு வலுவான தரவு பாதுகாப்பை மலேசியா உறுதி செய்திருப்பது இன்று ஆசியான் நாடுகளின் முக்கியப் பார்வையாக இருக்கிறது.

ஆசியானின் டிஜிட்டல் பொருளாதாரம் தற்போது 300 பில்லியன் அமெரிக்க டாலராக (1.25 திரில்லியன் ரிங்கிட்) மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030ஆம் ஆண்டுக்குள் 1 திரில்லியன் அமெரிக்க டாலரை (4.20 திரில்லியன் ரிங்கிட்) அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் தரவு, கிளாவ்ட் கம்ப்யூட்டிங் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சக்திமிக்க உருமாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆசியான் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று தியோ நி சிங் வலியுறுத்தினார்.

மேலும், டிஜிட்டல் சமூகங்களில் புத்தாக்கத்தை மேம்படுத்தி ஒரு பிரத்தியேக வளர்ச்சியை நோக்கி ஆசியான் பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இப்பிராந்தி யத்தில் சைபர் மருட்டல்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆசியானின் வளர்ந்து வரும் புவிசார் அரசியல், முன்னேற்றகரமான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் அடிப் படையில் தீர்வு காண்பதற் குரிய வழிமுறைகளை அடையாளம் காண்பது அவசியம் எனவும் அவர் சொன்னார்.

அரசாங்கங்களுக் கிடையிலான ஒத்துழைப்பு, தனியார் துறை, அனைத்துலக அமைப்புகள், பிராந்திய வியூகங்களில் கவனம் செலுத்துதல், தகவல் பகிர்வு போன்றவை சைபர் பாதுகாப்புக்கு ஆக்கப்பூர்வமானவையாக இருக்கின்றன என்று தியோ நி சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜி.எஸ்.எம்.ஏ. தலைமை நிதி அதிகாரி லூய்ஸ் ஈஸ்டர்புரூக், எம்சி எம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் சலீம் ஃபாத்தே டின், மலேசிய தொடர்புத்துறை அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் மனோ வீரபத்திரன், ஜி.எஸ்.எம்.ஏ. ஆசிய பசிபிக் வட்டாரத் தலைவர் ஜூலியன் கோர்மன், துறை சார்ந்த உயர் அதிகாரிகள், தலைவர்கள், பிராந்திய பங்காளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here