அலோர் காஜா, நவம்பர் 5 :
வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் 208ஆவது கிலோ மீட்டரில் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 25 வயது சிங்கப்பூர் பெண் உயிரிழந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) இரவு 11.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், ஜோகூர் பாருவில் இருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் வழியில் நடந்த விபத்தில் ஹுவாங் கைட்டிங், 25 என்ற பெண் உயிரிழந்ததாக அலோர் காஜா மாவட்ட காவல்துறை தலைவர், துணைத் தலைவர் அர்ஷத் அபு தெரிவித்தார்.
காரை ஓட்டிச் சென்ற 28 வயதான முஹமட் ஹில்மி அப்துல் ரஹீம் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் மற்றொரு பயணியான கென்னத் ஃபோங் ஜெங் யிப் (27) அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினார் என்றும் மூவருமே சிங்கப்பூரியர்கள் என்றும் அர்ஷாத் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.