கோலாலம்பூர், நவம்பர் 6 :
கடந்த வியாழன் அன்று Sime UEP தொழில் பூங்கா, சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வளாகத்தை போலீசார் சோதனை செய்தபோது, உடனடி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து RM392,370 மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தும் கும்பலின் தந்திரம் முறியடிக்கப்பட்டது.
சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் கூறுகையில், கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவவினர் பிற்பகல் 3 மணியளவில் குறித்த வளாகத்தை ஆய்வு செய்தது.
வளாகத்தின் பின்புறம் உள்ள தரையில், கெட்டமைன் என நம்பப்படும் 7,134 கிராம் எடையுள்ள போதைப்பொருள் அடங்கிய 286 உடனடி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அடங்கிய ஆறு பெட்டிகளை போலீசார் கைப்பற்றினர்.
இந்தக் கும்பலின் செயல்பாடு என்னவென்றால், சந்தையில் உள்ள உடனடி நூடுல் பாக்கெட்டுகளைப் பின்பற்றி, அதனுள் போதைப்பொருளை வைத்து அவற்றை ஒரு கூரியர் நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்று அவர் கூறினார்.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே இந்தக் கும்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, கும்பலின் உறுப்பினர்களை அடையாளம் காண போலீசார் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர் ,” என்று அவர் மேலும் கூறினார்.
போதைப்பொருள் குற்றங்கள் குறித்த எந்தத் தகவலும் 03-78627100 என்ற எண்ணில் சுபாங் ஜெயா மாவட்ட காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தெரிவிக்கலாம் என்றார்.