சிலாங்கூர், பினாங்கு, கெடாவில் வெள்ளம்: நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

வெள்ளம் காரணமாக சிலாங்கூர், பினாங்கு, கெடாவில் இருந்து  நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.  சில பகுதிகளில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   சிலாங்கூரில் எட்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன, மொத்தம் 212 குடும்பங்களைச் சேர்ந்த  890  பேர் வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை, தஞ்சோங் கராங்கில் மற்றொரு நிவாரண மையம் திறக்கப்பட்டது. பினாங்கில், செபராங் பேராய் தெங்கா மற்றும் செபராங் பெராய் செலாட்டன் ஆகிய இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட 117 பேர் மூன்று நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்மா, புக்கிட் மெர்தாஜாம், மச்சாங் புபோக், தேசா டமாய்  ஆகியவையும்  அடங்கும்.

செபெராங் பேராய் செலாடன், லாடாங் வால்டோர், தாமன் பெகாக்கா மற்றும் ஜாவி ஆகிய இடங்கள்   வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், கெடாவின் குலிம் மற்றும் பந்தர் பஹாரு மாவட்டங்களில் 239 பேர் ஆறு வெவ்வேறு நிவாரண மையங்களுக்கு  அனுப்பப்பட்டனர். மெலகாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக நள்ளிரவுக்குப் பிறகு அலோர்கஜாவில் உள்ள இரண்டு நிவாரண மையங்களுக்கு 29 பேர் வெளியேற்றப்பட்டனர்.

பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தங்கள் பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here