PH உடன் GPS இணைவது கடினம் : சரவாக் DAP தலைவர்

பொதுத் தேர்தலுக்குப் பிறகு பக்காத்தான் ஹராப்பானுடன் கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) இணைந்து செயல்படும் என்பதை  எதிர்பார்க்க முடியாது என்று சரவாக் டிஏபி தலைவர் சோங் சியெங் ஜென் கூறுகிறார்.  GPS-க்கு வாக்களிப்பது அம்னோவுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்றார்.

PH அரசாங்கம் வீழ்ந்த பின் 2021 ஆகஸ்டில் முஹிடின் யாசின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மார்ச் 2020ல் புதிய  அரசாங்கத்தை அமைப்பதில் BN உடன் இணைந்து அம்னோவுக்கு GPS  விசுவாசமாக இருந்துள்ளது.   GE15க்குப் பிறகு இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிலையான அரசாங்கத்தை அமைப்பார் என்று GPS  தலைவர் அபாங் ஜொஹாரி  வெளிப்படையாக நம்பிக்கை தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சரவாக் தொகுதி மக்கள் வாக்களிக்கும்  அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். என்றும் அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் தவிர்க்க வேண்டும் அதனால்  GPS க்கு வாக்களிக்கக்கூடாது என்றும் கூறினார். PH க்கு சபா மற்றும் சரவாக்கில் இருந்து 22 இடங்கள் தேவைப்படும.  2018 இல் வெற்றி பெற்ற 10 இடங்களை கூட்டணி தக்க வைத்துக் கொள்ள சரவாக் மக்கள்  உதவ வேண்டும் என்று சோங் கூறினார்.

முன்னதாக,  அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க PH ஆனது GPS மற்றும் Gabungan Rakyat Sabah உடன் மட்டுமே வேலை செய்ய முடியும் என்று PKR துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி  இதற்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here