உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் வாயுக் கசிவு; 17 தொழிலாளர்களுக்கு குமட்டல் மற்றும் மயக்கம்..!

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 17 :

இன்று காலை, சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து கசிந்த நைட்ரஜன் வாயுவை சுவாசித்ததால், அத் தொழிற்சாலையில் மொத்தம் 17 தொழிலாளர்கள் குமட்டல் மற்றும் மயக்கம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு காலை 11.33 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே சுபாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் 4 உறுப்பினர்களுடன் இயந்திரம் ஒன்று சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தது என்றும் சிலாங்கூர் தீயணைப்புத்துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறினார்.

“இந்த சம்பவத்தில் நைட்ரஜன் வாயு என நம்பப்படும் 1.39 சதுர மீட்டர் x 5.57 மீட்டர் பரப்பளவில் உறைந்த இறைச்சி பதப்படுத்தும் அறையில் வாயு கசிவு ஏற்பட்டது.

“அங்குவந்த தீயணைப்புத் துறையினர் எரிவாயு வழங்கலின் பிரதான குழாய் வால்வை மூடியதுடன் உடனே அனைத்து தொழிலாளர்களையும் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், எனினும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here