ஜாலான் மந்தின் – சிரம்பான் சாலையில் நிலச்சரிவு

நீலாயில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால்,  பத்து 8, மந்தின் – சிரம்பான் பிரதான சாலையில்  இன்று அதிகாலை 1 மணியளவில் நிலச்சரிவு சம்பவத்தால் அப் பாதை மூடப்பட்டது.

நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மாண்டின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) பணியாளர்கள் அவசர அழைப்பு வந்தவுடன் அந்த இடத்திற்கு விரைந்தனர். மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண், பாறைகள் மற்றும் மரங்கள் சாலையை நோக்கி சரிந்ததாக நடவடிக்கை தளபதி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புதையுண்டதாக தெரியவரவில்லை. புல்டோசரைப் பயன்படுத்தி சிரம்பான்  நகராண்மைக்கழக (MBS) உதவியுடன் தீயணைப்புத் துறையால் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் நேற்று கூறினார். தேவையற்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் பார்த்துக் கொள்ள தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here