நாம் தற்போது கோவிட் 19 தொற்றின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம் : கைரி தகவல்

நாட்டில் கோவிட்-19 பரவும் தன்மை குறைந்துள்ளதாக  சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுனார்.  கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது  கோவிட் -19இன்  புதிய வழக்குகள் 13.4% குறைந்துள்ளதாகவும்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விகிதம்  குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் கோவிட்-19 தொற்று  விகிதம்   சற்று அதிகரித்தாலும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது   என சுங்கை பூலோ மருத்துவமனையில்  நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இந்த புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி   பேசினார்.  புதிய கோவிட்-19 அலை  கட்டுப்பாட்டில் உள்ளது என்று கைரி நம்பிக்கை தெரிவித்தார்.
நவம்பர் தொடக்கத்தில், நாட்டில் Omicron XBB துணை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத்  தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் கோவிட்-19 வழக்குகளின் புதிய அலையை அறிவித்தது.

இதற்கிடையில், வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்கும் கோவிட்-19  தொற்று  நபர்கள் வரிசையில் நிற்கத் தேவையில்லை, ஆனால் சுகாதார அமைச்சக அதிகாரிகளால் நேரடியாக அவர்கள்  வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கைரி கூறினார்.

அவர்கள் வாக்களிக்கும் மையங்களின் நுழைவாயிலில் சுகாதார அதிகாரிகளிடம் தங்களின்    அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்  என்றும்  அறிவுறுத்தப்பட்டது.   வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு பாதைகள் எதுவும் இருக்காது என்று அவர் நேற்று அறிவித்திருந்தார்.

MySejahtera பயன்பாட்டில் கோவிட்-19 நேர்மறை நபர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் இருக்கும் என்று அவர் கூறினார்.

வார இறுதி நாட்களில், குறிப்பாக வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்   அனைவரும்   கட்டாயம்  முகக்கவசம்  அணிய வேண்டும் என்று கேட்டுக்  கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here