தனது பிறந்தநாளை ஆதரவற்ற முதியவர்களுடன் கொண்டாடிய நடிகர் விஷால்

பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகன் விஷால் இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நெருங்கிய நண்பர்கள என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று அதிகாலை முதலே விஷாலின் பிறந்தநாள் குறித்து ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷால் இன்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார். மேலும் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தியதோடு குழந்தைகளுக்கு அவர் உணவு ஊட்டினார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளில் விஷால் செய்த இந்த சிறப்பான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here