கூட்டணி அமைப்பது குறித்த BN இன் முடிவு நாளை வெளியாகலாம் என்கிறார் விக்னேஸ்வரன்

தேசிய முன்னணியின் உச்சமன்ற கூட்டம் இன்று பிற்பகல் தனது கூட்டத்தை முடித்துக்கொண்டது. இருப்பினும் அரசாங்கத்தை அமைப்பதில் யாருடன் ஒத்துழைப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன், பெரிகாத்தான் நேஷனல் (PN) அல்லது பக்காத்தான் ஹராப்பான் (PH) ஆகியவற்றுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது குறித்து பிஎன் பரிசீலிப்பதாகக் கூறினார். இது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்றார். இரண்டு கூட்டணிகளுக்கு இடையே மஇகாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விகளை அவர் நிராகரித்தார்.  தேசிய முன்னணியின் உச்சமன்றத்தின் முடிவை கட்சி பின்பற்றும் என்றார்.

MCA தலைவர் வீ கா சியோங் விக்னேஸ்வரனை எதிரொலித்தார். அனைத்து சாத்தியக்கூறுகளும் பிஎன் உயர்மட்டத் தலைமையால் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இன்று அம்னோ தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ​​“நாங்கள் இணைந்து ஒரு முடிவுக்கு வருவோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பல தேசிய முன்னணி  தலைவர்கள் உச்சமன்ற கூட்டத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு இங்கு வந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு மற்ற கூட்டணிகளுடன் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிப்பதாக  தெரிய வந்தது.

முன்னதாக, பிஎன் எம்பிக்கள் கூட்டணியின் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியுடன் ஶ்ரீ பசிபிக் ஹோட்டலில் ஒரு சந்திப்பில் இணைந்தனர். பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் அதில் கலந்து கொண்டனர். இரு கூட்டணிகளின் பிரதிநிதிகளும் கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதங்களை நடத்தினர்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜாஹிட், அனைத்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை அமைப்பதில் உச்சமன்றத்தின் முடிவைப் பின்பற்றுவார்கள் என்றார்.

இதற்கு முன் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சட்டப்பூர்வ அறிவிப்புகள் (SD) செல்லாது என்றார்.

இதற்கிடையில், கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிகளின் தலைவர்கள் தங்கள் பிரதமர் வேட்பாளரை முன்மொழிவதற்கான காலக்கெடுவை ஒரு நாள் நீட்டித்து மாமன்னர் வழங்கியுள்ளார். விருப்பமான வேட்பாளரின் பெயரை சமர்ப்பிக்க நாளை மதியம் 2 மணி வரை அவகாசம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here