நான் அடுத்த பிரதமரா? பொய் தகவல் என்கிறார் ஹிஷாமுடின்

டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் அடுத்த பிரதமராக வருவதற்கு பெரிகாத்தான் நேஷனல் (PN) முன்வந்ததாக கூறும் தகவலை  மறுத்துள்ளார். பக்காத்தான் ஹராப்பான் அல்லது பெரிகாத்தான் நேஷனல் உடன் விவாதங்களில் ஈடுபடவில்லை என்று செம்ப்ராங் நாடாளுமன்ற  உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

பலர் (PN இன் சலுகை) கட்டுரையைப் பகிர்ந்துள்ளனர். இது ஒரு தவறான குற்றச்சாட்டு என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எனக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்று அவர் தனது முகநூலில் இன்று எழுதினார்.

10ஆவது பிரதமர் பதவியை வழங்குவதாக PN ஆதாரங்களை மேற்கோள்காட்டி வெளியான ஊடக அறிக்கைக்கு அவர் பதிலளித்தார். ஹிஷாமுடின் தனது இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை நீக்கியதற்காக செய்தி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here