
கோலாலம்பூர் 13:
வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஒன்பது அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி தெரிவித்தார்.
அக்டோபர் 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் இந்த விலை கட்டுப்பாட்டு நடவடிக்கையில் கீழ்க்கண்ட பொருட்கள் அடங்கும்:
இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி
தக்காளி
சிவப்பு மிளகாய்
சிவப்பு நிற சிறிய வெங்காயம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்
ஆஸ்திரேலியப் பருப்பு
தேங்காய்
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, தீபாவளி காலத்தில் மக்கள் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக வாழ் தமிழர்கள் அனைவரும் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளியை கொண்டாடுகின்றனர்.



















