சீனாவில் கோவிட் தொற்று அதிகரிப்பை தொடர்ந்து அதிபர் ராஜினாமா செய்யுமாறு எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர். அரசாங்கத்தின் கடுமையான கோவிட் நடவடிக்கைகளுக்கு எதிராக சீனாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, சிலர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது தங்கள் கோபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.
ஷாங்காயில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் குவிந்துள்ளனர், பெய்ஜிங் மற்றும் நான்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவிட் தொற்று இறப்புகளை சீன அதிகாரிகள் மறுத்தாலும், உரும்கியில் உள்ள அதிகாரிகள் மன்னிப்புக் கோரினர், மேலும் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதன் மூலம் “ஒழுங்கை மீட்டெடுப்பதாக” உறுதியளித்தனர்.
சீனாவின் மிகப்பெரிய நகரமும், நாட்டின் கிழக்கில் உள்ள உலகளாவிய நிதி மையமான ஷாங்காய் நகரில் நடந்த போராட்டத்தின் போது, மக்கள் “ஜி ஜின்பிங், பதவி விலகு” மற்றும் “கம்யூனிஸ்ட் கட்சி, பதவி விலகு” என்று முழக்கமிட்டனர். சிலர் வெற்று வெள்ளை பதாகைகளை வைத்திருந்தனர், மற்றவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உரும்கியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலர்களை வைத்தனர்.
இத்தகைய கோரிக்கைகள் சீனாவிற்குள் ஒரு அசாதாரண காட்சியாகும், அங்கு அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நேரடியாக விமர்சித்தால் கடுமையான தண்டனைகள் ஏற்படலாம். தொடர் போராட்டங்கள் சீனாவின் தலைவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளன. கோவிட் தொற்று கட்டுப்பாடுகள் “சோகமாகவும், கோபமாகவும், நம்பிக்கையற்றதாகவும் உணரவைத்ததாக மக்கள் கூறினர். அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களுக்கு தலைமை தாங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.