அனுமதியின்றி 20 ஆடுகளை இடமாற்றம் செய்த குற்றச்சாட்டில், கால்நடை வளர்ப்பவருக்கு RM5,000 அபராதம்

புக்கிட் மெர்தாஜாம், நவம்பர் 30 :

கடந்த அக்டோபரில் பினாங்கு மாநில கால்நடை சேவைத் துறையின் அனுமதியின்றி 20 கெடா ஆடுகளை இடமாற்றம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட, ஒரு கால்நடை வளர்ப்பவருக்கு RM5,000 அபராதம் விதித்து இன்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

42 வயதான எஸ்.தவமாறன் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, மாவட்ட நீதிமன்ற நீதவான் முஹமட் ஹரித் முஹமட் மஸ்லான் முன்னிலையில், ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒருவரால் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் வாக்குமூலம் அளித்தார்.

அக்டோபர் 21 ஆம் தேதி மாலை சுமார் 6.30 மணியளவில் கால்நடை மருத்துவ சேவைகள் திணைக்களத்தின் இயக்குனரிடமிருந்து அல்லது எந்தவொரு கால்நடை அதிகாரியின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல், PJW2145 பதிவு எண் கொண்ட லோரியைப் பயன்படுத்தி 20 கெடா (ஆண்) ஆடுகளை இங்குள்ள ஜாலான் அரக்குடாவிற்கு கொண்டு சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

RM5,000 அபராதம் செலுத்தப்பட்ட பிறகு லோரி திருப்பித் தரப்படும் என்றும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தவமாறன் அபராதம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த வழக்கை கால்நடை மருத்துவ சேவைகள் துறையின் வழக்குரைஞர் ரோசிமன் அவாங் தஹ்ரின் கையாண்டார், அதே நேரத்தில் தவமாறன் தரப்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here