கிளானா ஜெயா LRT மீண்டும் சேவையை தொடங்கியது

கிரிஞ்சி எல்ஆர்டி நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும்  சீரமைக்கப்பட்டுவிட்டன.   மின்னல் தாக்குதலால்  மேடை  ஊடுருவல் அவசர  நிறுத்தத்தின்    (PLATFORM INTRUSION EMERGENCY  STOP)  சேதமடைந்த பாகத்தில் பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்த பின்னர்,     வழக்கம் போல  இரு திசைகளிலும்  ரயில்கள் இயங்குவதாக Rapid KL தெரிவித்துள்ளது.

நேற்று  மாலை 5.46 மணியளவில் கிளானா ஜெயா LRT பாதையில்    மின்னல் தாக்கி  இடையூறு ஏற்பட்டதால் பயண அட்டவணையில் தாமதம் உண்டானது. இதனைத் தொடர்ந்து  பல ரயில் நிலையங்களில்  கூட்ட  நெரிசல் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here