வில்லியாக நடிப்பது கஷ்டம்

தமிழில் ‘போடா போடி’ படத்தில் அறிமுகமாகி பிரபல நடிகையாக உயர்ந்துள்ள வரலட்சுமி சரத்குமார் வில்லி வேடங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதையொட்டி வரலட்சுமி அளித்துள்ள பேட்டியில், ”நான் சினிமா துறைக்கு வந்து பத்து ஆண்டுகளில் 45 படங்களில் நடித்திருக்கிறேன்.

எனது வில்லி வேடத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. வில்லி வேடங்களில் நடிப்பது கஷ்டம். ஆனாலும் அதில் என்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன். எனது 10 வருட சினிமா பயணம் சுலபமாக இல்லை. எத்தனையோ எதிர்ப்புகள், நிராகரிப்புகளை எதிர்கொண்டேன்.

ஆனாலும் நிறைய நல்ல விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். கடினமாக உழைத்தேன், முயற்சியை கைவிடவில்லை. இப்போது திரும்பி பார்க்கும்போது 45 படங்களில் நடித்து விட்டேனா என்ற மலைப்பு வருகிறது. எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

ஓய்வில்லாமல் நடித்து மிகவும் பிஸியாக போகிறது சினிமா வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here