இன்று மாலை 3 மணி வரை நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 5 :

நாட்டின் ஆறு மாநிலங்களில் இன்று மாலை 3 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் கிளாந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் சபாவைச் சுற்றியுள்ள பல பகுதிகளை உள்ளடங்குகின்றன.

அவற்றில் கிளாந்தானின் தும்பாட், கோத்தா பாரு, பாச்சோக் மற்றும் பாசீர் பூத்தே ஆகியவற்றை உள்ளடக்கியது, திரெங்கானுவில் மாராங், டுங்கூன் மற்றும் கெமாமன் ஆகிய பகுதிகளும் அடங்குகின்றன.

அவற்றுடன் நெகிரி செம்பிலானில் உள்ள தாம்பின் மற்றும் மலாக்கா முழுவதுமுள்ள பல பகுதிகளும் இந்த காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜோகூரின் தாங்காக், மூவார், பத்து பஹாட், குளுவாங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளும் உள்ளடக்கியுள்ளன். அதே சமயம் சபாவின் தாவாவில் உள்ள லஹாட் டத்து, சண்டகான் தோங்கோட், தெலுபிட், கினாபதங்கான் மற்றும் பெலூரான், கூடாடாஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

“ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியங்கள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். அதாவது எச்சரிக்கை விடுக்கப்பட்ட நேரத்தின் பின்னரான ஆறு மணி நேரத்திற்கு மேல் செல்லாது,” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here