முன்னர் இருந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சிறந்த திட்டங்களை ஒற்றுமை அரசாங்கம் தொடரும் – பிரதமர்

புத்ராஜெயா, டிசம்பர் 5:

முன்னர் இருந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சிறந்த கொள்கைகள் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது விவாத நிலையில் இருந்த சட்ட மசோதாக்கள், பிரச்சனைகளின்றி சிறப்பானதாக இருந்தால், அவை ஒற்றுமை அரசாங்கத்திலும் நிச்சயம் தொடரப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உதாரணமாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சுகாதார அமைச்சின் G.E.G எனப்படும் எதிர்காலத்தில் புகைபிடிக்காத புதிய தலைமுறையை உருவாக்கும் சட்ட மசோதா மற்றும் 2022-ஆம் ஆண்டு புகையிலை பொருட்கள் மற்றும் புகைபிடித்தல் கட்டுப்பாட்டு சட்ட மசோதா ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே அமலில் இருக்கும் செயல்முறைகளை நாம் தொடருவதாக இருந்தாலும், மாற்றங்களைச் செய்வதில் கண்டிப்புடன் நடந்து கொள்ளுவோம் என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here