மனைவி ஹேமமாலினியுடன் 87ஆவது பிறந்த நாளை கொண்டாடிய தர்மேந்திரா

புகழ்பெற்ற பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா, தனது 87-வது பிறந்த நாளை மும்பையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை அவரது மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவை வைரலாகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமமாலினி 1963-ல் ‘இது சத்தியம்’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.

பின்னர் இந்திக்கு போய் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து தர்மேந்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தர்மேந்திராவுக்கு 2-வது திருமணம். இருவரும் ‘ஷோலே’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுக்கு ஈஷா தியோல், அகானா தியோல் ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here