உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி: அர்ஜெண்டினா- குரேஷியா அணிகள் இன்று மோதல்

கத்தாரில் நடைபெற்று வரும் 22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. 2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி இன்று  தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் , 2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, கடந்த முறை 2ஆவது இடத்தை பிடித்த குரோஷியா , ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 4 நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா- குரோஷியா அணிகள் மோதுகின்றன. லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

அதைத் தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவை. 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.  குரோஷியா  அணி  பலம் வாய்ந்ததாக உள்ளது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது.  நட்சத்திர வீரர் மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார்.

முக்கியமாக  அரைஇறுதியில்  வீரர்களை ஒருங்கிணைப்பது அவசியமானதாகும். ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் , மார்டினஸ் , மொலினா போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here