ரஷ்யாவின் கெமரோவோவிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ ; 20 பேர் மரணம்

ரஷ்யா, கெமரோவோவில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 பேர் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முதியவர்கள் என்பதால், கட்டடத்தில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயை அணைப்பதற்கு முன்பே 20 முதியவர்கள் உடல் கருகி இறந்தனர் என கூறப்படுகிறது.

காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here