திரெங்கானு மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 344 குடும்பங்களை சேர்ந்த 1,423 பேர் இன்று நண்பகல் அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு செயற்பாட்டிலிருந்த பத்து தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் மூடப்பட்டன.
இதற்கிடையில், திரெங்கானுவில் உள்ள ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க 34 நிவாரண மையங்கள் இன்னும் இயங்கிவருகின்றன.
அங்கு 1,307 குடும்பங்களைச் சேர்ந்த 4,387 பேர் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.