நாட்டின் நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,000க்கும் மேற்பட்டோர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை 8 மணி நிலவரப்படி, நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,054 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சபா கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் 1,500 பேர் உயர் அலை நிகழ்வு காரணமாக தமது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கிளாந்தானில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 1,787 குடும்பங்களைச் சேர்ந்த 5,411 பேர், பாசீர் மாஸ் மற்றும் தும்பாட் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள 18 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், நேற்று இரவு அங்கு 1,835 குடும்பங்களைச் சேர்ந்த 5,585 பேர் தங்கியிருந்தனர் என்று கிளாந்தான் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) பேரிடர் மேலாண்மை மற்றும் செயல்பாட்டு அதிகாரி, கேப்டன் முகமட் ஹனிஃப் உமர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

திரெங்கானுவில் நேற்று இரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,628 பேர் தங்கியிருந்த நிலையில், இன்று காலை அந்த எண்ணிக்கை 1,438 ஆகக் குறைந்ததால், தெரெங்கனுவில் வெள்ள நிலைமை மேம்பட்டுள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அங்குள்ள நான்கு மாவட்டங்களில் 12 நிவாரண மையங்கள் இன்னும் செயல்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

பேராக்கில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

அதேவேளை சபாவில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here