லங்காவி சாதனை! இந்தாண்டு பார்வையாளர்கள் தொகை 2.04 மில்லியன்!

லங்காவி:
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் லங்காவி தீவு மொத்தம் 2.04 மில்லியன் சுற்று லாப் பயணிகளை பதிவு செய்துள்ளது, பெரும்பாலான பார்வையாளர்கள் உள்நாட்டு விடுமுறைக்கு வருபவர்கள் “இப்போது Cuti-Cuti Malaysia” பிரச்சார முறையில் பயணி கள் வருகை களை கட்டுகிறது.

லங்காவி மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் ஃபுவாட் சே அனி @ அப்த் கானி கூறுகையில், ஆண்டு இறுதிக்குள் தீவு மூன்று மில்லி யன் பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்கை அடையும் என்று நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.லங்காவியின் சுற்றுலாத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் இந்த டிசம்பர் இறுதிக்குள் குறைந்தது மூன்று மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்கை அடைய இன்னும் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

“நவம்பர் மற்றும் டிசம்பர் இடையே மொத்தம் 15 நிகழ்வுகள், நவம்பர் 12 அன்று லங்காவி ஜியோபார்க் எண்டிரோ சவால் 2023; லங்காவி சர்வதேச அரை மராத்தான் 2023 (டிசம்பர் 2) மற்றும் லங்காவி சர்வதேச நாட்டுப்புற விழா 2023 (டிசம்பர் 29-31) ஆகியவை நடத்தப்படும்” என்று அவர் கூறினார். இன்று லங்காவி விளையாட்டு வளாகத்தில் லடா வடக்கு பெயின்ட்பால் சூப்பர் லீக்கிற்கான பரிசளிப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

இரண்டாவது வருடத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான பெயிண்ட்பால் போட் டியானது 800 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்களை ஈர்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். “உள்ளூர் அணிகள் தவிர, சிங்கப்பூர், தைவான் மற்றும் ஆஸ் திரேலியாவில் இருந்து வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் உள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here