வெள்ளம் காரணமாக ECRL திட்டத்தின் கட்டுமானப் பணிகள் பாதிப்பு

துன்ஜோங்கில் இருந்து, திரெங்கானுவில் உள்ள செத்தியூ வரையான, 82 கிலோமீட்டர் நீளமுள்ள கிழக்கு கடற்கரை ரயில் பாதை (ECRL) திட்டத்தின் பிரிவு 1 மற்றும் 2க்குரிய கட்டுமானப் பணிகள் 70 சதவீத முடிவடைந்த நிலையில், அவை தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள கட்டுமான வேலைகளை தொடர முடியாதுள்ளது என்று, மலேசிய ரயில் இணைப்பு நிறுவனத்தின் (MRL) கட்டுமானப் பிரிவு மேலாளர் (பிரிவு 1 மற்றும் 2), முகமட் அசெமி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

“வெள்ளத்தினால் நிலப்பரப்பில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் பாதிக்கப்படுகின்றன, எனவே பொறியியல் அடிப்படையில், நாங்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை” என்று இன்று புக்கிட் அபால் பெங்காவா அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்கொடைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், பாலம் கட்டுமானம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் வெள்ளம் காரணமாக தாமதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் முகமட் அசெமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here