ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 சென் குறைப்பு: நிதி அமைச்சு அறிவிப்பு!

கோலாலம்பூர்:

இன்று முதல் ரோன்97 (RON97) ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 சென் குறைந்து RM4.15 ஆக விற்பனை செய்யப்படும் என்று நிதி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேவேளையில், மானியமற்ற ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 15 சென் குறைந்து RM3.62 ஆகவும், மானியமற்ற டீசலின் விலை 10 சென் குறைந்து RM4.47 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எரிபொருள் விலைகள் நாளை முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

ஆகஸ்ட் 13 – 19 வரையிலான காலப்பகுதியில் எரிபொருளின் புதிய விலை, ரோன்97 (RON97): RM4.15 / லிட்டர் (20 சென் குறைவு), மானியமற்ற ரோன்95: RM3.62 / லிட்டர் (15 சென் குறைவு), மானியமற்ற டீசல்: RM4.47 / லிட்டர் (10 சென் குறைவு) ஆக உள்ளது.

இருப்பினும், ‘புடி95’ (BUDI95) திட்டத்தின் கீழ் தகுதிபெற்ற நபர்களுக்கான ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM1.99 ஆகவும், ‘புடி டீசல்’ (BUDI Diesel) திட்டத்தின் கீழ் டீசல் விலை லிட்டருக்கு RM2.10 ஆகவும் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றும் நிதி அமைச்சு தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here