எல்லை தாண்டிய புகை மூட்டம்: சரவாக்கில் 7 பகுதிகளில் காற்று மாசடைவு குறியீடு ‘ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டியது!

கோலாலம்பூர்:

எல்லை தாண்டிய புகை மூட்டம் காரணமாகச் சரவாக்கில் உள்ள 7 முக்கியப் பகுதிகளில் காற்று மாசடைவு குறியீடு (API) ‘ஆரோக்கியமற்ற’ நிலையைப் பதிவு செய்துள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மலேசியக் காற்று மாசடைவு மேலாண்மை அமைப்பின் (APIMS) தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன. புதன்கிழமை காலை 9 பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலை பதிவாகியிருந்த நிலையில், தற்போது 7 பகுதிகளாகக் குறைந்துள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி ஆரோக்கியமற்ற நிலையில் உள்ள பகுதிகளாக,

சமரஹான் (Samarahan): 183

செரியான் (Serian): 183

கூச்சிங் (Kuching): 177

ஸ்ரீ அமான் (Sri Aman): 159

சாரிக்கே (Sarikei): 158

முக்கா (Mukah): 152

சிபு (Sibu): 152

சுற்றுச்சூழல் துறையின் அளவுகோலின்படி, காற்று மாசடைவு குறியீடு 0 முதல் 50 வரை ‘நல்லது’, 51 முதல் 100 வரை ‘மிதமானது’, 101 முதல் 200 வரை ‘ஆரோக்கியமற்றது’, 201 முதல் 300 வரை ‘மிகவும் ஆரோக்கியமற்றது’, மற்றும் 300-க்கு மேல் ‘அபாயகரமானது’ எனக் வகைப்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 68 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் மூலம் இந்தத் தரவுகள் மணிநேர அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here