Toto 4D ஜாக்பாட் அதிஷ்டக் குலுக்கலில் பேராக்கைச் சேர்ந்த 50 வயது இல்லத்தரசி ஒருவர் RM20.75 மில்லியன் ரொக்கத்தை வென்றுள்ளார்.
கடந்த 14ஆம் தேதி “9506 & 1406” என்ற எண்களை தான் வாங்கியதாக, கோலாலம்பூரில் உள்ள STM லாட்டரி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அவரது வெற்றிகான பரிசுத்தொகையை பெற்றுக்கொண்ட போது, அந்தப்பெண்மணி கூறினார்.
“இந்த பரிசுத்தொகை தனக்கு தெய்வத்தின் கிருபையால் நடந்ததாகவும், தான் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் போதெல்லாம் “டத்தோ கோங்” கின் ஆலயத்தில் தனது பிரார்த்தனையை எப்பொழுதும் சமர்ப்பிப்பதாகவும்” மகிழ்ச்சியுடன் அந்த இல்லத்தரசி கூறினார்.
தனக்கு வெற்றி எண்களையும், புதிதாகக் கிடைத்த பணத்தையும் கொடுத்த கடவுளுக்கு தான் நன்றி செலுத்துவதாகவும் கூறினார்.
“தான் பெற்ற பரிசுத்தொகையை பயன்படுத்தி முதலில் குடும்பக் கடனை அடைக்க விரும்புவதாகவும், பின்னர் பணத்தை எப்படிச் செலவிடுவது என்று திட்டமிட்டு செலவு செய்ய விரும்புவதாகவும்,” அவர் மேலும் கூறினார்.