மலேசியாவின் எக்கோ சுற்றுலாத் தளங்கள்

அனைத்துலக எக்கோ சுற்றுலா அமைப்பின் வழி சுற்றுச்சூழல் நலனைக் கருதி பொறுப்புடன் பயணம் மேற்கொள்வதோடு அந்த சுற்றுச்சூழல் அம்சங்களை நிலைத்திருக்கச் செய்வதில்தான் எக்கோ சுற்றுப் பயணிகள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.    பசுமை உணர்வோடு நாம் எப்படி பயணம் மேற்கொள்வது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.    இதில் முதலில் நாம் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலின் கவன ஈர்ப்புகளையும் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.    நம் நாட்டிலும் பசுமை சுற்றுலா மேற்கொள்ள பல இயற்கை வள இடங்கள் உள்ளன.

தாமான் நெகாரா

பகாங் மாநிலத்தில் ஜெராண்டூட், கோலா தஹானில் அமைந்திருக்கும் இந்த தாமான் நெகாரா தேசிய பூங்காவாக கருதப்படுகின்றது.    மேலும் இது, நாட்டின் (தீபகற்ப மலேசியா) மிக பெரிய அளவிலான பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகவும் கருதப்படுகின்றது.    இங்கு யானைகள், எறும்பு உண்ணி, பலவகையான மான்கள் உள்ளிட்ட விலங்குகள், மிருகங்கள் வசிக்கின்றன.    இது தவிர இந்த பூங்காவின் நடுவே உள்ள ஆற்றங்கரையில் உள்ள பூர்வகுடியினரின் கிராமங்களையும் நாம் பார்க்க முடியும்.

ரோயல் பெலும் மாநில பூங்கா

பேராக்கில்  அமைந்துள்ள இந்த அரச பூங்கா பகாங் தேசிய பூங்காவைப் போல் உள்ள ஒரு பசுமை சுற்றுலாத் தளமாகும். அதிலும்  இது உலகில் மிக பழைமையான மழைக்காடுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இங்கு சுற்றுப் பயணிகளைக் கவரும் வண்ணம் பல சுவாராஸ்யமான  அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.    குறிப்பாக, மலை ஏறுதல், படகு பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.    மலேசியாவில் சூரிய கரடி (சன் பே) உள்ளிட்ட விலங்குகளும் இங்கு உள்ளன.    அதேபோல்  மலாயா புலிகளும்  இங்கு வசிக்கின்றன.

லங்காவி கிளிம் சுற்றுச்சூழல் பூங்கா

லங்காவியின் அமைந்திருக்கும் இந்த  பூங்கா தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கும்  முதல் சுற்றுச் சூழல் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.    100 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த பூங்கா பல வகையான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது.    கண்கவர் வண்ணம் இயற்கை அழகுகளைப் பார்வையிடல் மட்டுமன்றி இங்கு காயா படகு பயணமும் மேற்கொள்ளலாம்.

பினாங்கு தேசிய பூங்கா

இந்த பூங்கா பினாங்கில் தெலுக் பகாங் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பூங்காவை முழுமையாக பார்வையிட வேண்டும் என்றால் படகு பயணம் மேற்கொள்வது சிறப்பு எனவும் ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.    அதிலும் இந்த பூங்காவிலுள்ள ஏரியில் இரண்டு தன்மை கொண்ட நீர் ஒன்றுக்கொன்று கலக்காமல் இருப்பது தனிச் சிறப்பாகக் கருதப்படுகின்றது.    மேலும், இங்கு பினாங்கு ஆமைகள் சரணாலயமும் உள்ளது. அதில் பல வகையான ஆமை வகைகளை நாம் பார்க்க முடிகின்றது.

புக்கிட் நானாஸ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி

தலைநகரின் மையப் பகுதியில் அதுவும் கேஎல் டவர் அருகில் இந்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி உள்ளது. இந்த சிறு அளவிலான வனப் பகுதியில் முன்னதாக தலைநகரை சுற்றியிருந்த நிஜ மலைக்காடுகளைச் சார்ந்த உயிரினிங்கள், இயற்கை வளங்கள் வகைகள் பாதுகாக்கப்படுகின்றன.    இதன் முதன்மை நுழைவாயில் ஜாலான் ராஜா சுலான் அருகில் உள்ளது. ஆனால், கோலாலம்பூர் எல்.ஆர்.டி ரயில் சேவையைப் பயன்படுத்தி டாங்வாங்கி எல்ஆர்டி நிலையத்திலிருந்து செல்வது இலகுவாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here