கெடா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெற 50-50 வாய்ப்புகள் உள்ளன என்கிறார் சைபுடின்

பெட்டாலிங் ஜெயா:

திரெங்கானு மற்றும் கிளாந்தான் மாநிலத் தேர்தல்களில் பாஸ் கட்சிக்கு கடும் போட்டியை ஏற்படுத்த பக்காத்தான் ஹராப்பான் உறுதியாக உள்ளது என்று டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் உச்ச மன்ற கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டணியின் பொதுச் செயலாளரான சைபுடின், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களை வெற்றிகரமாகப் பாதுகாப்பதில் தாம் மிகவும் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

ஆனால் கெடாவில் பக்காத்தானுக்கு சம வாய்ப்பு உள்ளது என்றும் நாங்கள் கருதுகிறோம். மாநிலத் தேர்தல்களின் சூழலில் கெடாவை கைப்பெற்ற நாம் முயற்சிப்போம் ” என்று அவர் கூறினார்.

2022 இல் 15வது பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தலை நடத்தாத ஆறு மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும்.

கிளாந்தான் மாநிலத்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் ஜூன் 9 அன்று முடிவடைகிறது, அதே நேரத்தில் கெடாவவிற்கு செப்டம்பர் 4 ஆம் தேதியும், திரெங்கானு செப்டம்பர் 1ஆம் தேதி வரையும் பதவிக்காலம் உள்ளது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முடிவடைகிறது, அதுபோல் பினாங்குக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதியும் நெகிரி செம்பிலானுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி வரையும் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here