நேற்று நள்ளிரவில் பேராக், கம்பாரிலுள்ள கம்போங் சாஹோமில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள குடியிருப்பாளர்கள் 86 பேர் தங்குவதற்காக ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டதாக, பேராக் மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, 23 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேர் அங்குள்ள செக்கோலா கேபாங்சான் சாஹோமில் உள்ள நிவாரண மையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக, அது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.