வரும் கட்சித் தேர்தலில் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை – அசிரஃப் வாஜ்டி

வரவிருக்கும் கட்சித் தேர்தலில் தனது நடப்பு பதவியைப் தற்காக்கப் போவதில்லை என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர், டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி நேற்று உறுதிப்படுத்தினார்.

நேற்று நடந்த அம்னோ இளைஞர் பேரவையில் தனது உரையை ஆற்றியபோது, 1,000க்கும் மேற்பட்ட அம்னோ பிரதிநிதிகள் முன்னிலையில் அசிரஃப் வாஜ்டி இந்த விஷயத்தை அறிவித்தார்.

“இளைஞர் பிரிவை நான் வழிநடத்தத் தவறியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்… மீண்டும் அம்னோ எழுச்சி பெற நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், கடந்த ஐந்து ஆண்டுகளாக அம்னோ இளைஞர்களுக்காக என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்து கொடுத்துள்ளேன்.

“இளைஞர் பிரிவு தலைவர் நான் தற்காக்க மாட்டேன், மேலும் எங்கள் கட்சி மீண்டும் வலுவாக இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அவர் அந்த உரையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here