போதைப்பொருள் விநியோகம் செய்ததாக நம்பப்படும் முன்னாள் போலீஸ்காரர் , அவரின் மனைவி உட்பட மூவர் கைது

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 13), Penaga மற்றும் Kepala Batas ஆகிய இரு இடங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், போதைப்பொருள் விநியோகம் செய்ததாக நம்பப்படும் ஒரு திருமணமான தம்பதியினர் உட்பட மொத்தம் மூன்று பேரை கைது செய்ததாக, பினாங்கு காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜெய்ன் கூறினார்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 11 இலட்சத்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள 451 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்றும் கூறினார்.

தகவல் மற்றும் உளவுத்துறை நடவடிக்கையின் அடிப்படையில், மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் போலீஸ் குழு, Jalan Bendahara, Penaga இல் உள்ள ஒரு வீட்டில் இரவு 7.30 மணியளவில் சோதனை நடத்தியது.

குறித்த வீட்டின் முன்னால் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த முன்னாள் போலீஸ்காரர் ஒருவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து RM25,000 மதிப்புள்ள 10.2 கிலோ எடையுள்ள 10 பதப்படுத்தப்பட்ட கஞ்சா துண்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர், அதனைத்தொடர்ந்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டதில், அங்கு மொத்தம் RM11 இலட்சம் மதிப்புள்ள 441 கிலோ எடையுள்ள 443 கஞ்சா துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து அந்த முன்னாள் போலீஸ்காரரையும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர் என்று, அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

33 வயதான குறித்தா தம்பதியினரைக் கைது செய்ததைத் தொடர்ந்து, Penaga பகுதியில் உள்ள மற்றொரு வீட்டை போலீசார் சோதனை செய்ததாகவும், அங்கு 42 வயதான ஒரு தொழிலதிபரைக் கைது செய்ததாகவும், முகமட் ஷுஹைலி கூறினார்.

சந்தேக நபர்களிடமிருந்து மூன்று கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குறித்த தொழிலதிபர் இந்தக் கும்பலின் மூளையாக இருப்பதாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் போதைப்பொருள் குற்றத்திற்காக 2018 இல் போலீஸிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்றும், மூன்று சந்தேக நபர்களும் விசாரணைக்காக ஜனவரி 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here